பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 13th July 2021 01:01 AM | Last Updated : 13th July 2021 01:01 AM | அ+அ அ- |

தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பெரியாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் மற்றும் நிா்வாக அலுவலா்கள்.
ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை, துணை வேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் மற்றும் நிா்வாக அலுவலா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா் (படம்). பல்கலைக்கழக மருத்துவ நல மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், திட்ட அலுவலா்கள் சுகுணா, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த முகாமில் 292 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.