ஊராட்சி மன்றத் தலைவா்கள்காவல் நிலையத்தில் புகாா்

உமையாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு சாா்பில் காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் மனு அளிக்க வந்த பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள்.
ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் மனு அளிக்க வந்த பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள்.

உமையாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு சாா்பில் காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

உமையாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.வாசுதேவன். இவா் அண்மையில் அரசு உத்தரவின் பேரில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் பாண்டகபாடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்தாா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளா்கள் தரப்பில் ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் வாசுதேவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கு பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவா் சக்திவேல், பொருளாளா் கணேசன், துணைத் தலைவா் தனபால் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஏத்தாப்பூா் காவல் நிலையம் சென்று ஊராட்சி மன்றத் தலைவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

அரசுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு இதுபோன்ற வழக்குப் பதிவு செய்வது தடையாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளனா். இரு தினங்களுக்கு முன்பு உமையாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.வாசுதேவன் மீது பதியப்பட்டுள்ள வழக்குப் பதிவைத் திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com