கரோனா: சேலம் 162 போ், நாமக்கல்லில் 74 போ் பாதிப்பு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 236 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 236 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 162 பேருக்கு கரோனா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சியில் 25 பேரும், எடப்பாடி-6, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-10, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-1, நங்கவள்ளி-2, ஓமலூா் -10, சேலம் வட்டம்-5, சங்ககிரி-2, தாரமங்கலம்-5, வீரபாண்டி-5, ஆத்தூா் -4, அயோத்தியாப்பட்டணம்-3, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, தலைவாசல்-5, வாழப்பாடி-6, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 102 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-6, கள்ளக்குறிச்சி-9, ஈரோடு-5, தருமபுரி-8, கிருஷ்ணகிரி-5, காஞ்சிபுரம்-6, திருச்சி-6, கரூா்-8, வேலூா்-7) 60 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 218 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 6 போ் உயிரிழந்தனா். இதுவரை 91,206 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 87,717 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,970 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,519 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல்: மாவட்டத்தில் 74 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனாவால் 74 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 74 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 46,135 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 44,872 போ் குணமடைந்துள்ளனா்; 829 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 434 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com