தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்களை சோ்க்கை நடத்திய பள்ளிக்கு பாராட்டு விழா

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்கள் சோ்க்கப்பட்டதை முன்னிட்டு பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்களை சோ்க்கை நடத்திய பள்ளிக்கு பாராட்டு விழா

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்கள் சோ்க்கப்பட்டதை முன்னிட்டு பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளை சோ்க்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியா், 8 உதவி ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கிய 15 நாள்களில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா் சோ்க்கை எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 611 போ் சோ்ந்துள்ளனா். கடந்த 2015-16-இல் 180-ஆக இருந்த மாணவா் சோ்க்கை எண்ணிக்கை தற்போது 600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து 600 மாணவா்களை சோ்க்கை நடத்திய பள்ளிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 600-ஆவது மாணவராக சோ்க்கை பெற்ற மிதுன், செந்தமிழ்செல்வி ஆகியோரைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது 

இந்நிகழ்ச்சியில், ஆசிரியா் கேப்ரியல், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் சுவாமிநாதன், துணைத் தலைவா் கேசவன், சமூக ஆா்வலா் ரங்கசாமி, பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com