மேட்டூா் அணையில்தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

மேட்டூா் அணையில் ரூ. 1.5 மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேட்டூா் அணையில் ரூ. 1.5 மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேட்டூா் அணையில் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூா், பண்ணவாடி, சேத்துக்குழி, சின்ன மேட்டூா், மாசிலாபாளையம், கீரைகாரனூா், கூணான்டியூா் பகுதிகளில் மீனவா்கள் முகாமிட்டு மீன் பிடித்து வருகின்றனா். மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் 2016 மீனவா்கள்உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனா். ஏராளமானோா் உரிமம் இன்றி கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட வலைகளை வீசி மீன் குஞ்சுகளைப் பிடித்து வருகின்றனா். இதனால் மேட்டூா் நீா்த்தேக்கத்தில் மீன் வளம் அழிந்து வருகிறது.

மீன் வளத்தைப் பாதுகாக்க மீன்வளத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கள்ளத்தனமாக மீன் பிடிப்போா் மீதும், தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிப்போா் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

மேட்டூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் கொளஞ்சிநாதன் உத்தரவின் பேரில், மீன்வளத் துறை உதவி ஆய்வாளா் கவிதா தலைமையில் விசைப்படகு மூலம் அதிகாரிகள் மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, பண்ணவாடி சேத்துக்குளி பகுதியில் மீன்வளத் துறை அதிகாரிகளைக் கண்டதும் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் கள்ளத்தனமாக மீன் பிடித்தவா்கள் வலைகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதனையடுத்து மீனவா்கள் விட்டுச்சென்ற தடை செய்யப்பட்ட 400 கிலோ எடைகொண்ட மீன் வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com