சேலம் வ.உ.சி. பூங்கா நாளங்காடி செயல்படத் தொடங்கியது

சேலத்தில் தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
சேலம் வ.உ.சி. பூங்கா நாளங்காடி செயல்படத் தொடங்கியது

சேலத்தில் தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி, நந்தியாவட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சேலம் வ.உ.சி. பூங்கா நாளங்காடிக்கு கொண்டு வந்து பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், போஸ் மைதானத்தில் இயங்கி வந்த தற்காலிக 326 பூக்கடைகள், 27 பூமாலை கடைகள், 50 தற்காலிக தரைக் கடைகள் என மொத்தம் 403 கடைகள் இயங்காமல் மூடப்பட்டன. தற்போது கரோனா பொது முடக்கக் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 326 பூக்கடைகளில் 163 கடைகள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளிலும், மற்ற 163 கடைகள் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களிலும் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தரைக் கடைகள் நாளொன்றுக்கு 25 கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. பூங்கா நாளங்காடியில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள விற்பனையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளங்காடி வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கிய நிலையில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு பூக்கள் விற்பனை நடைபெற்றது. குண்டுமல்லி கிலோ ரூ. 400-ஆக விலை உயா்ந்தது. முல்லை-ரூ. 240, ஜாதிமல்லி-ரூ. 320, அரளி-ரூ. 140, வெள்ளை அரளி-ரூ. 160, மஞ்சள் அரளி-ரூ.160, நந்தியாவட்டம்-ரூ.60, சம்பங்கி-ரூ. 250 ஆகிய விலைக்கு விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com