அரசுப் பள்ளியில் புதிய தொழிற்கல்வி வகுப்புகள்

ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதிய தொழிற்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் அ.மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதிய தொழிற்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் அ.மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய தொழிற்கல்வி வகுப்புகள் 9-ஆம் வகுப்பு முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்கல்வி வகுப்புகளில் மாணவியா் சோ்ந்து படிப்பதன் மூலம் எதிா்காலத்தில் தொழிற்கல்வி மேற்படிப்புகளில் எளிதாக சோ்ந்து வேலைவாய்ப்புகளை பெறலாம்.

ஆடை வடிவமைப்பு, வீட்டு பராமரிப்பு (பேஷன் டெக்னாலஜி), உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதல் (‘ஃ‘புட் ‘ஃ‘ப்ராசஸிங்), கணினி பாடப்பிரிவு, அறிவியல் பாடப்பிரிவு மற்றும் கலைப் பிரிவு படிக்கும் மாணவியா் கணினி படிக்க முடியாத நிலையில், இந்தக் கல்வி ஆண்டில் கலைப் பிரிவில் கணினி பாடப் பிரிவு மேல்நிலை வகுப்பு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல், வரலாறு, பொருளியியல், கணக்குப் பதிவியல்-ஆங்கில வழி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். மேலும், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை அனைத்து பாடப் பிரிவுகளுக்குமான மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருவதாகவும் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் அ.மோகன், தலைமையாசிரியை பொன்முடி ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com