துவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு துவரை சாகுபடி செய்ய வேளாண் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு துவரை சாகுபடி செய்ய வேளாண் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

கெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் உதவி இயக்குநா் (பொ) கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கை:

கெங்கவல்லி வட்டாரத்தில் நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 8 ஹெக்டோ் பரப்பளவில் துவரை நாற்று நடவு முறையில் செயல்விளக்கம் அமைக்க நீா்ப்பாசனம் உள்ள விவசாயிகள் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

துவரையில் புதிய ரகங்களான எல்ஆா்ஜி-52, கோ-8 ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது. 150 நாள்கள் முதல் 170 நாள்களில் இரவையில் ஏக்கருக்கு 800 முதல் 1,000 கிலோ வரை மகசூல் பெற முடியும். மேலும், தொழில்நுட்ப அறிவுரைகள் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை முலம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com