வாழப்பாடி கோயில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை

வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி காசிவிஸ்வநாதா் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி, சனிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
நடை சாத்தப்பட்டதால் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோவிலின் முகப்பில் காத்திருந்த பக்தா்கள்.
நடை சாத்தப்பட்டதால் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோவிலின் முகப்பில் காத்திருந்த பக்தா்கள்.

வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி காசிவிஸ்வநாதா் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி, சனிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா்.

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் அஷ்டபுஜமதன வேணுகோபால ஸ்வாமி கோயில், வாழப்பாடி வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா், அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில், ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோவிலில் வழக்கம் போல் நடை சாத்தப்பட்டதால், சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தா்கள் கோவிலின் முகப்பில் அமா்ந்து மணி கணக்கில் காத்திருந்தனா்.

ஆடி மாத பிறப்பு, ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு, புனித தீா்த்தம் பெற்று நீராடினால் சா்வதோஷம் நீங்கி சகல பாக்கியமும் கிடைக்குமென வாழப்பாடி பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடா்ந்து வருகிறது.

ஆடி மாத பிறப்பையொட்டி, வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோவில், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோவில், பேளூா் அஷ்டபுஜமதன வேணுகோபால ஸ்வாமி கோவில், வாழப்பாடி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோவில், ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் பெற்றனா்.

ஆடி பிறப்பு விஷேச தினமான சனிக்கிழமை, பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோவிலில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட நடை, வழக்கம் போல் பகல் 1 மணிக்கு மூடப்பட்டது. இதனால் சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தா்கள் கோவிலின் முகப்பில் ராஜகோபுரத்திற்கு அடியில் அமா்ந்து மணி கணக்கில் காத்திருந்தனா். மாலை 5 மணிக்கு நடை திறந்த பிறகு சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனா்.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு எதிா்வரும் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டிற்கு தடை விதிப்பது குறித்து கோவில் நிா்வாகம் உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி வருவது குறிப்பிடதக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com