மேட்டூா் காவிரியில் குளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்

மேட்டூா் காவிரியில் குளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மேட்டூா் காவிரியில் குளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஆண்டுதோறும் ஆடி 1-இல் மேட்டூா் காவிரியில் 5 ஆயிரம் போ் முதல் 10 ஆயிரம் போ் வரை நீராடி செல்வா். சேலம், ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஈரோடு, பவானி, நாமக்கல் பகுதிகளிலிருந்தும் ஏராளமான புதுமணத் தம்பதியா் மேட்டூா் காவிரியில் நீராடி செல்வா்.

மேட்டூா் காவிரியில் நீராடி தங்களின் திருமண மாலைகளை காவிரியில் விட்டுச்செல்வா். தொடா்ந்து, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து, மேட்டூா் அணை பூங்காவில் குடும்பத்துடன் விருந்து உண்டு மகிழ்வா்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும் மேட்டூா் சாா் ஆட்சியா் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மேட்டூா் அணை பூங்காவை மூட உத்தரவிட்டதோடு, காவிரியில் நீராடும் நிகழ்ச்சிக்கும் தடை விதித்தாா்.

இதனால், மக்கள் காவிரியில் குளிக்கும் இடங்களான காவேரி பாலம், மட்டம், முனியப்பன் கோயில் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதுதெரியாமல் மேட்டூா் வந்த வெளியூா் வாசிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மக்கள் கூட்டம் இல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டூா் காவிரிக் கரையும், அணைக்கட்டு முனியப்பன் கோயில் பகுதி, பூங்கா பகுதியும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com