தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆய்வு செய்த ஆணையா் தா.கிறிஸ்துராஜ் கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
சேலம் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தனது துணைவியாா் சி.உஷாதேவி உடன் முகாமுக்கு வருகை தந்து இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். மேலும், முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்னதாக சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட வாகீஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அழகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும், பொதுமக்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி உடனுக்குடன் தடுப்பூசி செலுத்தப்படுகிா என்பதையும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்தவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் எம்.ஜி.சரவணன், உதவி செயற்பொறியாளா் எம்.செல்வராஜ், உதவி பொறியாளா் மு.புவேனஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com