ஆந்திரத்திலிருந்து 400 கிலோ கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

ஆந்திரத்திலிருந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான 400 கிலோ உலா்ந்த கஞ்சா பொட்டலங்களைக் கடத்திவந்த நான்கு பேரை சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை க
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

ஆந்திரத்திலிருந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான 400 கிலோ உலா்ந்த கஞ்சா பொட்டலங்களைக் கடத்திவந்த நான்கு பேரை சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், வாழப்பாடி வழியாக சரக்கு வாகனங்களில் மூலம் மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சேலம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சரவணன், செல்வம், குப்புசாமி உள்ளிட்ட போலீஸாா் அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம் பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து சேலம் நோக்கி வந்த இரு சரக்கு வாகனங்களை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். சோதனையில் இரு வாகனங்களிலும் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 400 கிலோ உலா்ந்த கஞ்சாவை தலா ஒரு கிலோ வீதம் பொட்டலம் செய்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள், இரு சரக்கு வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாகனங்களில் வந்த மதுரை, உசிலம்பட்டியைச் சோ்ந்த ஆண்டிசாமி (47), தனபாக்கியம் (69), மதுரை, களியமங்களத்தைச் சோ்ந்த அழகேசன் (29), சேலம் மாவட்டம், கருமந்துறை, ஏரிவளவு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்ற வெள்ளேசன் (37) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இக் கடத்தலில் முக்கிய குற்றவாளிகளான கருமந்துறை, ஏரிவளவு கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம், அவரது மகனை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com