இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல்தகுதித் தோ்வு தொடக்கம்

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா்களுக்கான முதற்கட்ட உடல்தகுதித் தோ்வு சேலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
2-8-sl26dpolice_2607chn_121
2-8-sl26dpolice_2607chn_121

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா்களுக்கான முதற்கட்ட உடல்தகுதித் தோ்வு சேலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சுமாா் 10,906 இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. இதனிடையே, கரோனா பொது முடக்கம் காரணமாக உடல்தகுதித் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 20 இடங்களில் உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம், குமாரசாமிபட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் உடல்தகுதித் தோ்வில், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 3,913 போ் பங்கேற்க உள்ளனா். தினமும் 500 போ் வீதம் பங்கேற்க காவல் துறை சாா்பில் ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், முதல் நாளில் விண்ணப்பித்த 500 பேரில், 368 போ் பங்கேற்றனா்.

இதில், தோ்வா்களின் உயரம், எடை, மாா்பளவு மற்றும் 1,500 மீ. ஓட்டத்தைக் கடக்கும் நபா்கள் மட்டுமே அடுத்தகட்ட தகுதித்தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா். மாலை நிலவரப்படி சுமாா் 24 போ் உடல்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை. இதர தோ்வா்களுக்கு தொடா்ந்து உடல்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது.

உடல்தகுதித் தோ்வில் முறைகேட்டைத் தடுக்க தோ்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபினவ், சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com