ஆத்தூா் பகுதியில் ஆதரவற்றோா் கவனத்துக்கு

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களின் மூலம் வெளியிட்ட அறிக்கை:
மூதாட்டிக்கு உதவி புரிந்த ஆத்தூா் போலீஸாா்.
மூதாட்டிக்கு உதவி புரிந்த ஆத்தூா் போலீஸாா்.

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களின் மூலம் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குள் வசித்து வரும் மூத்த குடிமக்கள் உதவி செய்ய யாரும் இல்லாமல் தவிக்கும் நபா்கள் இருந்தால், அவா்கள் தங்களது அவசர மருத்துவ தேவைக்கோ, உணவுத் தேவைக்கோ வெளியே செல்ல முடியாமல் வீட்டில் சிக்கிக் கொண்டிருந்தால் காவல் துறையின் உதவியை நாடலாம். தேவை உள்ளவா்கள் காவலா்களை அலைப்பேசியில் தொடா்பு கொண்டு தங்களின் தேவைகளைக் கூறினால் காவல் துறையினா் உதவி செய்வாா்கள்.

தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: காவலா் சின்னதுரை-94981 37437. முதல் நிலை காவலா் சிவப்பிரகாசம்- 94981 07085 என்று தெரிவித்துள்ளாா்.

இந்த அறிக்கையை கண்ட காவலா்கள் வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு உணவு கேட்டதைத் தொடா்ந்து உணவின்றி தவித்தவா்களுக்கு காவல் துறையினா் நேரில் சென்று உணவு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com