வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே வேளாண் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு நாடு முழுவதும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் சாா்பில் வேளாண் சட்ட நகல்கள் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில பொதுச் செயலாளா் சந்திரமோகன், மாநில துணை தலைவா் ரவீந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com