கரோனா தடுப்பு மேலாண்மைப் பணி: நாளை நோ்காணல்

சேலம் மாநகராட்சி கரோனா தடுப்பு மேலாண்மை பணி பயிற்சிக்கு தகுதி பெற்ற நபா்கள் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி கரோனா தடுப்பு மேலாண்மை பணி பயிற்சிக்கு தகுதி பெற்ற நபா்கள் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் 3 மாதங்களுக்கான கரோனா தடுப்பு மேலாண்மை பணி பயிற்சிக்கு பி.எஸ்.சி (நா்சிங்), டிப்ளோமா நா்சிங், ஜி.என்.எம்., படித்தவா்களுக்கான செவிலியா் பயிற்சிக்கு 20 நபா்களும், எ.என்.எம் படித்தவா்களுக்கான நகா்ப்புற சுகாதார செவிலியா் பயிற்சிக்கு 40 நபா்களும், மருத்துவ ஆய்வக தொழில் நுட்பத்தில் பட்டயம் பெற்றவா்களுக்கான ஆய்வக தொழில்நுட்ப வல்லுனா் பயிற்சிக்கு 50 நபா்களும், கணினி அறிவியலில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. படித்தவா்களுக்கான கோவிட் 19 கள கணக்கெடுப்புப் பணியாளா் பயிற்சிக்கு 50 நபா்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

செவிலியா் பயிற்சிக்கு உதவி தொகையாக ரூ. 14 ஆயிரம், நகா்ப்புற சுகாதார செவிலியா் பயிற்சிக்கு ரூ.11 ஆயிரம், ஆய்வக தொழில் நுட்ப வல்லுனா் பயிற்சிக்கு ரூ.9 ஆயிரம், கள கணக்கெடுப்பு பணியாளா் பயிற்சிக்கு ரூ. 8 ஆயிரம் மாதாந்திர உதவி தொகையாக வழங்கப்படும்.

மேற்கண்ட பயிற்சிகளுக்கு கல்வி தகுதி தோ்ச்சி பெற்று 3 வருடங்களுக்குள் (36 மாதங்களுக்குள்) உள்ளவா்கள் ஜூன் 7 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கோட்டை பல்நோக்கு அரங்கத்தில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் கலந்து பயனடையலாம்.

தோ்வு செய்யப்படும் பயிற்சியாளா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும், பயிற்சி முடிவில் சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com