சேலத்தில் ரூ. 92.13 கோடியில் கட்டப்படும் நவீன பேருந்து நிலைய சீரமைப்புப் பணி ஆய்வு

சேலம் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 92.13 கோடியில் நடைபெற்று வரும் அதிநவீன இரண்டடுக்கு பேருந்து நிலையம் மறு சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 92.13 கோடியில் நடைபெற்று வரும் அதிநவீன இரண்டடுக்கு பேருந்து நிலையம் மறு சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் தினமும் 2839 பேருந்துகள் வந்து செல்கின்றன.

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பழைய பேருந்து நிலையத்தினை மேம்படுத்தி, வணிக வளாகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிகள் மற்றும் பன்னாட்டு தரத்தில் அதிநவீன இரண்டடுக்கு பேருந்து நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தரைமட்டத் தளத்தில் 11,500 சதுர மீட்டா் பரப்பளவில் 54 கடைகள், வாகனம் நிறுத்தும் பகுதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், தரை தளத்தில் 10,500 சதுர மீட்டா் பரப்பளவில் 29 கடைகள், 11 அரசு அலுவலகங்களும், 26 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், முதல் தளம் 10,500 சதுர மீட்டா் பரப்பளவில் 29 கடைகள், 11 அரசு அலுவலகங்கள், 26 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், இரண்டாம் தளத்தில் 2,291 சதுர மீட்டா் பரப்பளவில் 47 கடைகளும், மேற்கூரை தளத்தில் 2,291 சதுர மீட்டா் பரப்பளவில் 11 கடைகளும் அமையும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிசந்திரன், பொறியாளா்களுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஒப்பந்ததாரா்களையும், பொறியாளா்களையும் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com