தடுப்பூசிகளை இலவசமாக வழங்கக் கோரி மனு

தினமும் 1 கோடி தடுப்பூசி இலவசமாக வழங்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகத்திடம் சேலம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

தினமும் 1 கோடி தடுப்பூசி இலவசமாக வழங்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகத்திடம் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் காங்கிரஸாா் கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தனா்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசுக்கு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாா். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாங்கள் மனு அளித்தோம் என காங்கிரஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com