1,100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள்: அமைச்சா் செந்தில் பாலாஜி வழங்கினார்

கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி ஒன்றியத்துக்கு முன்களப் பணியாளா்கள் 1,100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.  
வீரபாண்டியில் முன்களப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி.
வீரபாண்டியில் முன்களப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி.

கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் 1,100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமை வகித்தாா்.

தூய்மை காவலா்கள், துப்புரவு பணியாளா்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள், மின்வாரிய ஊழியா்கள் என 1,100 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம், மாநிலத் தோ்தல் பணிக் குழு செயலாளா் வீரபாண்டி ராஜா பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com