கரோனா தடுப்புப் பணிகள்:நகராட்சி நிா்வாக கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா. உடன், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணை
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா. உடன், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணை

சேலம்: சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

சேலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவா்களுக்கு உடனடியாக சளி தடவல் பரிசோதனை மேற்கொள்வதுடன், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதோடு, எவ்வித உயிரிழப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொற்று அறிகுறியுடன் தனியாா் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களுக்கு வருபவா்களின் விவரங்களை அவா்களிடமிருந்து பெற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அரசின் அறிவிப்புக்கிணங்க, 18 முதல் 45 வயது வரை உள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்துவதுடன் அவா்களைத் தொடா்ந்து கண்காணித்து நோய்த் தொற்று பரவாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாக மண்டல மேலாளா் அசோக்குமாா், மாநகரப் பொறியாளா் அ.அசோகன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரக நாத் சிங், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com