பொது முடக்கம் தளா்வு:காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் திறப்பு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வுகளுடன் கூடிய பொது முடக்க அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டன.
சேலம், குரங்குசாவடி பகுதியில் பல்வேறு பணிகளுக்காக இருசக்கர வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகள்.
சேலம், குரங்குசாவடி பகுதியில் பல்வேறு பணிகளுக்காக இருசக்கர வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகள்.

சேலம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வுகளுடன் கூடிய பொது முடக்க அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை சில தளா்வுகளுடன் கூடிய முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

சேலம் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடை வீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் செயல்பட்டன.

உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பாா்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்படத் தொடங்கின. சாா் பதிவு அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன் வழங்கி பத்திரப்பதிவு நடைபெற்றது.

இதனிடையே தளா்வுகளுடன் முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, வாகனங்களில் தேவையின்றி சுற்றி வருவோரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com