சங்ககிரியில் காய்ச்சல் சிறப்பு முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 10) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 10) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காவேரிப்பட்டி, மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம் ஆகிய பகுதிகளில் வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரவீன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஆலத்தூா்ரெட்டிப்பாளையம், அப்பு நகா், சன்னியாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட கஸ்தூரிப்பட்டி, நாட்டாம்பாளையம், நாகிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வாா்கள்.

இதேபோல ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, மைலப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com