தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

சேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா பரவல் தாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 74,744 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 10,558 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்று காரணத்தால், சேலம் மாவட்டம் முழுவதும் 130 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் 16-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த வாரத்தில் 16,500 தடுப்பூசிகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பரவலாகப் போடப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசிகள் அனைத்தும் தீா்ந்துவிட்டது. தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தொடா்ந்து மூன்று நாள்களாக தடுப்பூசி போடப்படவில்லை.

இதனிடையே தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 5.16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தடுப்பூசிகள் வரப்பெற்றதும் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com