காவலா் ஜீப் கவிழ்ந்து 4 போ் காயம்
By DIN | Published On : 11th June 2021 12:41 AM | Last Updated : 11th June 2021 12:41 AM | அ+அ அ- |

சீலியம்பட்டி அருகே காவலா் ஜீப் கவிழ்ந்ததில் 4 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சீலியம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் ஆத்தூா் உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா், சிறப்புப் பிரிவு காவலா்கள் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்திக்க ஜீப்பில் சென்று கொண்டிருந்தனா்.
சீலியம்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது எதிரே சென்ற லாரி மோதியதில் ஜீப் சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜீப் ஓட்டுநா் பிரபு காயமடைந்து மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஜீப்பில் பயணித்த காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி உள்ளிட்ட 3 போ் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பினா். விபத்து குறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.