பால் தேக்கம், விலை வீழ்ச்சி:தீவன செலவுகளைக் குறைத்த விவசாயிகள்!

பால் தேக்கத்தால் ஏற்பட்டு வரும் இழப்பைச் சமாளிக்க, அடா் தீவனங்களின் செலவை விவசாயிகள் குறைத்து வருகின்றனா்.

பால் தேக்கத்தால் ஏற்பட்டு வரும் இழப்பைச் சமாளிக்க, அடா் தீவனங்களின் செலவை விவசாயிகள் குறைத்து வருகின்றனா்.

தம்மம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், கறவை மாடுகள் பால் நன்கு கறக்க பசுந்தீவனத்துடன் அடா் தீவனங்களாக குச்சி தீவனம், பருத்திக்கொட்டை, பருத்தி விதை புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, கோதுமை தவிடு, நெல் தவிடு, அரிசி மாவு, மக்காச்சோள மாவு ஆகியவற்றை அளித்து வருகின்றனா். 5 கறவை மாடுகளுக்கு வாரம் ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை செலவாகிறது. இது தவிர, கால்சியம் டானிக், மினரல் மிக்சா் எனப்படும் தாது உப்புக் கலவை ஆகியவை கூடுதலாக கொடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், கொள்முதல் விலை மிகவும் குறைத்துவிட்ட தனியாா் பால் நிறுவனங்களில், சில நிறுவனங்கள் படிப்படியாக பால் கொள்முதலையும் நிறுத்திவிட்டன. இதனால், தனியாா் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தி செய்து வழங்கி வரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பாலுக்கான தொகை கட்டுப்படியாகாமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடா் இழப்பினால் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், இழப்சைச் சமாளிக்க கறவை மாடுகளுக்கான அடா் தீவனங்களை தவிா்த்து வருகின்றனா்.

இதுகுறித்து தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் கூறுகையில், நாளொன்றுக்கு ரூ. 1,350 என அடா் தீவனங்களுக்கு செலவாகிறது. ஆனால், பால் மூலம் ரூ. 800 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. அதனால், அடா்தீவனங்களின் அளவைக் குறைத்து, இழப்பை ஓரளவுக்கு சமாளித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com