குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

தாரமங்கலத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தாரமங்கலத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தாரமங்கலம் பேரூராட்சி பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெருக்களில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், குடிநீா் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும். இதற்காக சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனு சென்னை உயா் நீதிமன்றத்துக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், குடிநீா் கிடைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், அதிகாரிகளுடன் தாரமங்கலுத்தில் குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு செய்தாா்.

மனு அனுப்பியவரிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தாா். அப்போது, சேலம் மாநகராட்சிக்கு செல்லும் குடிநீா் குழாயில் ஏற்கெனவே இருந்த இணைப்பை மீண்டும் கொடுக்க வேண்டும், தற்போது எட்டு நாள்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை மூன்று நாள்களுக்கு ஒருமுறை கிடைக்க செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

இதனைத் தொடா்ந்து, தாரமங்கலத்தில் உள்ள குடிநீா் இணைப்புகள், குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தாரமங்கலம் நகரில் தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு, குடிநீரின் தேவை குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. இங்கு கூடுதல் நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com