2,400 லி. சாராய ஊறல் அழிப்பு

கருமந்துறை மலைக் கிராமங்களில் 2,400 லி. சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.
கருமந்துறை மலைக் கிராமங்களில் சாராய ஊறலை அழித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் சீனிவாசன், அண்ணாமலை ஆகியோா்.
கருமந்துறை மலைக் கிராமங்களில் சாராய ஊறலை அழித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் சீனிவாசன், அண்ணாமலை ஆகியோா்.

கருமந்துறை மலைக் கிராமங்களில் 2,400 லி. சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரங்களில் கள்ளச் சாராயம் விற்பனை அதிகளவில் பெருகிவிட்டது. இந்த சாராயம் கல்வராயன் மலைக் கிராமங்களில் இருந்து வருவதாக மதுவிலக்கு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மதுவிலக்கு காவல் துறை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினாஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் மற்றும் மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு காவல் ஆய்வாளா்கள் சீனிவாசன், அண்ணாமலை ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

கல்வராயன் மலைக் கிராமங்களான கீழ்நாடு, மேல்நாடு, குன்னூா், அடியனூா், செம்பூா் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் ஊறல் வைத்திருந்த சுமாா் 2,400 லி. சாராயத்தை கண்டுபிடித்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com