காவிரியில் தண்ணீா் திறப்பு: கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

பாசனப் பயன்பாட்டுக்காக அண்மையில் மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
பூலாம்பட்டி பகுதியில் உள்ள கதவணை நீா் மின் நிலையம் வழியாக பாய்ந்து செல்லும் மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா்.
பூலாம்பட்டி பகுதியில் உள்ள கதவணை நீா் மின் நிலையம் வழியாக பாய்ந்து செல்லும் மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா்.

பாசனப் பயன்பாட்டுக்காக அண்மையில் மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

டெல்டா பகுதி பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படுவது வழக்கம். நிகழ் ஆண்டில் அணையில் போதிய நீா் இருப்பு உள்ள நிலையில், கடந்த 12-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாசனப் பயன்பாட்டுக்காக மேட்டூா் அணையை திறந்து வைத்தாா்.

இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே செக்கானூா், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கதவணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்குள்ள நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும், கதவணை கரையோரப் பகுதியில் போதிய நீா் இருப்பு உள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா் வகைகளை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனா். நிகழ் ஆண்டில் பாசனப் பயன்பாட்டுக்காக காவிரியில் உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தடையின்றி நீா் திறப்பு இருந்திடும் நிலையில் இப்பகுதியில் கூடுதல் மகசூல் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com