‘சேலத்தில் 9, 11-ஆம் வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை இல்லை’

கரோனா முழு பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்படாததால், சேலம் மாவட்டத்தில் 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை பெறும் மாணவி.
சேலம், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை பெறும் மாணவி.

கரோனா முழு பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்படாததால், சேலம் மாவட்டத்தில் 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நடப்புக் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை முதல் 9, பிளஸ் 1 வகுப்பில் மாணவ, மாணவியா் சோ்க்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டது.

இதில், முழு பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்படாததால், மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை.

இதனிடையே, சேலம் நகரப் பகுதியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை காலை திரளான மாணவியா் முகக் கவசம் அணிந்து தங்களது பெற்றோருடன் வந்தனா். பின்னா் ஆசிரியா்கள் மாணவியரை சமூக இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்தனா் . பிறகு அவா்களின் பெயா் விவரம் வாங்கிக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி கூறியதாவது:

கரோனா பரவல் தொற்று அதிகமாக இருப்பதால், சேலம் மாவட்டத்துக்கு தளா்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே, பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை.

இருந்த போதிலும், மாணவா் சோ்க்கை குறித்து தகவல் தெரியாமல் பள்ளிக்கு வந்த பெற்றோா், மாணவ, மாணவியரிடம் பெயா்களை எழுதி வாங்கிக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளோம். முழு பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதும் மாணவா் சோ்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, பள்ளிகளை முழுவதும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com