நுண்ணீா்ப் பாசனத் திட்டம் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

நுண்ணீா்ப் பாசனத் திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
14atypo1_1406chn_213_8
14atypo1_1406chn_213_8

நுண்ணீா்ப் பாசனத் திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீா் மேலாண்மை என்பது விவசாயத்தில் தற்போது மிக இன்றியமையாததாக உள்ளது. அதனால் இருக்கும் நீரை பயன்படுத்தி பயிா் சாகுபடி செய்ய சொட்டுநீா், தெளிப்புநீா்ப் பாசனக் கருவிகள் மற்றும் மழைதூவான்கள் அமைத்து நீரை சேதாரமின்றி கிடைக்கச் செய்வது அவசியமாகிறது.

சொட்டுநீா்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்வதால் தண்ணீா் நேரடியாக வோ்களுக்கு செல்கிறது. வாய்க்கால் பாசனத்தால் தண்ணீா் விரயம் ஆவது சொட்டுநீா்ப் பாசனத்தால் தடுக்கப்படுகிறது. சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கும்போது களைச்செடி வளா்வதும் குறைகிறது. மேலும், கரையும் தன்மையுடைய உரங்களை சொட்டுநீா்ப் பாசனம் மூலம் இடலாம். இதனால் தனியாக உரமிடும் செலவு குறைகிறது. பயிா்களுக்கு போதிய அளவில், தேவையான நேரத்தில் நீா் மற்றும் உரம் கிடைப்பதால் அதிக மகசூலை தருவதுடன், தரமான விளைபொருளையும் உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் .

குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிா் சாகுபடி செய்யலாம். மேலும், பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மானியத்துடன் புதுப்பித்துக்கொள்ளலாம்.

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், கணினி சிட்டா, அடங்கல், வரைபடம், நில உரிமைச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம் 2, மண்மாதிரி, பாசன நீா் ஆய்வு ஆகியவற்றுடன் வட்டார வேளாண் அலுவலகங்களில் பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அப்பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடா்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நுண்ணீா்ப் பாசனத் திட்டம் அமைக்க மகுடஞ்சாவடி வட்டாரத்துக்கு மட்டும் நடப்பு நிதியாண்டுக்கு 160 ஹெக்டேருக்கு ரூ. 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com