பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

பொது முடக்கக் காலத்தில் சுற்றித்திரிந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

பொது முடக்கக் காலத்தில் சுற்றித்திரிந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம், ஓமலூா் உள்கோட்ட போலீசாா் பொது முடக்கக் காலத்தில் வெளியே சுற்றித் திரிந்தோரின் 515 வாகனங்களை பறிமுதல் செய்தனா். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவ்வப்போதே ஒப்படைக்குமாறு ஓமலூா் டிஎஸ்பி சோமசுந்தரம் அறிவுறுத்தி இருந்தாா்.

இதனைத் தொடா்ந்து, வாகன உரிமையாளா்கள் உரிய ஆவணங்களைக் காட்டி வாகனங்களைப் பெற்றுச் செல்கின்றனா். வாகனங்களை பெற வருவோரிடம் காரணமின்றி வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்ற அறிவுரையுடன் போலீஸாா் வாகனங்களை ஒப்படைத்து வருகின்றனா்.

தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. பொருள்களை வாங்க ஒருவா் மட்டுமே வரவேண்டும். வெளியே வரும்போது முகக் கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியுடன் இருக்க வேண்டும், கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com