மதுப்புட்டி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், இதர மாவட்டங்களில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், இதர மாவட்டங்களில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தளா்வுகள் இல்லாத சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதர மாவட்டங்களில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில், மாவட்ட எல்லைகளான தொப்பூா், தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வர வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com