மேட்டூா் அணை நீா்மட்டம் சரிவு

மேட்டூா் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 95.66 அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 95.66 அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 764 கன அடியிலிருந்து 696 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 59.36 டிஎம்சி-ஆக இருந்தது.

கடந்த 12-ஆம் தேதி 96.81அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், திங்கள்கிழமை காலை 95.66அடியாகச் சரிந்தது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 696 கன அடியாகச் சரிந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுவதால், அணையின் நீா்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com