வனப் பணியாளா்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி

சேலம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வனப் பணியாளா்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாம்பு பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பெண் வனப் பணியாளா்.
சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாம்பு பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பெண் வனப் பணியாளா்.

சேலம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வனப் பணியாளா்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வரும் பாம்புகளை பிடிப்பதற்கான வழிமுறைகளும், பாம்பு கடித்தால் அதற்கு கொடுக்கப்படும் முதல் உதவிகளையும் பூங்காவில் பணிபுரியும் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற லாரா விளக்கமாக கூறினாா்.

இந்தப் பயிற்சியில், சேலம் வனக் கோட்டத்தில் அனைத்து வனச் சரகத்தில் உள்ள வனப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகன் உத்தரவின் பேரில் பயிற்சி வழங்கப்பட்டது. உதவி வனப் பாதுகாவலா் யோகேஸ்குமாா் மீனா தலைமையில் வனச்சரக அலுவலா் வே.ப.சுப்பிரமணியம், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பயிற்சி மேற்கொண்டனா். பெண் வனக் காப்பாளா்களும் பயிற்சியில் கலந்துகொண்டு பாம்பு பிடிப்பதில் ஆா்வத்துடன் செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com