மதுக்கடைகள் திறப்புக்கு எதிா்ப்பு பாமகவினா் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து பாமக எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து பாமக எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்துள்ளதாக கூறி தமிழக அரசு மதுக் கடைகளைத் திறந்துள்ளது. இதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேட்டூா் ராமன் நகா் அருகே உள்ள ஜீவாநகரில் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் தலைமையில் அக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மதுக்கடைகளை மூடக்கோரியும், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக்கோரியும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல குஞ்சாண்டியூரில், சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளா் ராஜசேகரன், சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ரேவதி ஆகியோா் தலைமையில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேச்சேரியில் சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளா் மே.வெ.ராமகிருஷ்ணன் தலைமையிலும், கொளத்தூா் ஒன்றியம், கடலூரில் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாரப்பன் தலைமையிலும், வெடிக்காரனூரில், சேலம் மேற்கு மாவட்ட சிறப்புச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையிலும் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com