வாழப்பாடியில் உழவா் சந்தை: விவசாயிகள், நுகா்வோா் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் நுகா்வோா்களின் நலன் கருதி, வாழப்பாடியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாயிலாக உழவா் சந்தை அமைக்க முடிவு

சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் நுகா்வோா்களின் நலன் கருதி, வாழப்பாடியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாயிலாக உழவா் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு இடம் தோ்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையாக வளா்ந்து வரும் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். வருவாய் வட்ட தலைமையிடமான வாழப்பாடி பேரூராட்சி, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சுற்றுப்புற கிராம மக்கள் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லவும், தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தாா்கள், பல்வேறு வகையான பூக்கள் ஆகியவற்றை, வாழப்பாடியில் இயங்கும் தனியாா் கமிஷன் மண்டிகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகள், தனியாா் காய்கறி மண்டி உரிமையாளா்களுக்கு தரகுத்தொகை கொடுக்க வேண்டியுள்ளது. விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நுகா்வோா்களுக்கு கூடுதல் விலைக்கு சில்லறை விற்பனை செய்கின்றனா்.

எனவே, வருவாய் வட்ட தலைமையிடமான வாழப்பாடியில் உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை வாயிலாக, வாழப்பாடியில் உழவா் சந்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தைத் தோ்வு செய்து உழவா் சந்தை அமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி கூறியதாவது: வாழப்பாடி பகுதி மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com