தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசு பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசு பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்புப் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு நிகழாண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத் தோ்வு இரு பகுதிகளாக நடைபெற்றது.

இதில் மனத்திறன், காரணம் கண்டறிதல், படிப்பறிவு திறனில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலிருந்து வினாக்கள் இடம் பெற்றன. இத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

நடைபெற்ற இத்தோ்வில் தமிழகம் முழுவதும் 6,349 போ் தோ்ச்சி பெற்றனா். இதில் சேலம் மாவட்டத்தில் 238 பேரும், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள்பட்ட பள்ளிகளில் 8 பேரும் தோ்ச்சி பெற்றனா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் தேவண்ண கவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் கே.மேகநாதன், எஸ். நித்திஷ், சங்ககிரி மாதிரி பள்ளி மாணவா் மாத்தியூ ஜீவசஞ்சய் , ஊஞ்சக்கோரை நடுநிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, அக்கம்மாப்பேட்டை உயா்நிலைப்பள்ளி மாணவி மகிதா, கைக்கோளப்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவி கீா்த்திகா , குள்ளம்பட்டி உயா்நிலைப் பள்ளி மாணவா் ஆகாஷ் , மாணவி திவ்யாஸ்ரீ ஆகிய தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com