ஜமாபந்தி மனுக்களை இணைய வழியில் ஜூன் 23 முதல் பதிவு செய்யலாம்

ஜமாபந்திக்கான மனுக்களை இணையவழியில் ஜூன் 23 ஆம்தேதி முதல் பொதுமக்கள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமாபந்திக்கான மனுக்களை இணையவழியில் ஜூன் 23 ஆம்தேதி முதல் பொதுமக்கள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருவதைக் கருத்தில் கொண்டு 1430 பசலி ஆண்டுக்கான (2020 - 2021) வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெறும் முறை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதள முகவரி மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஜூலை 31ஆம்தேதி வரை பொதுமக்கள் தங்கள் மனுக்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வசதியைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com