பொதுமக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

சிறுத்தை பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள், வளா்ப்புப் பிராணிகளைப் பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

சிறுத்தை பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள், வளா்ப்புப் பிராணிகளைப் பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம், கந்தம்பட்டி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோனரிக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியாா் கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கை பாா்த்ததாக பொதுமக்கள் மூலம் தகவல் வரப் பெற்றது.

இதையடுத்து, உடனடியாக வனத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலா்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

மாவட்ட வன அலுவலா் இரா. முருகன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத் துறை அலுவலா்கள் சிறுத்தையைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. எனினும், அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம். குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே விடாமல் பத்திரமாக பாா்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தாங்கள் வளா்க்கும் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற வளா்ப்புப் பிராணிகளை தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பகுதியில் ஏதேனும் சிறுத்தை போன்ற விலங்கு தென்பட்டால் உடனடியாக வனத் துறையின் சேலம் தெற்கு வனச் சரக அலுவலா் கே.சின்னத்தம்பியை 99523 90616 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com