சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சேலம் ஜவுளி கடை பேருந்து நிறுத்தம்.
சேலம் ஜவுளி கடை பேருந்து நிறுத்தம்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களது கட்சிகளுக்குத் தேவையான கொடிகள், சின்னங்கள், தொப்பிகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 

கொடி மற்றும் சின்னத்தை வித்தியாசமான முறையில் வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வடிவங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்களை அச்சடிக்க அனைத்துத் கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பிரசாரத்தின் போது தொண்டர்களுக்கு பயன்படும் வகையில், விதவிதமான வடிவங்களில் விசிறி, தொப்பி, நெற்றியில் மாட்டி கொள்ளும் கவசம் மற்றும் தலைவர்கள் உருவம் பொறித்த பேட்ஜ், வேட்டி, சேலை, துண்டு முதலானவற்றில் கட்சியின் வண்ணக் கரைகள், சின்னங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 

அதுமட்டுமின்றி கட்சித் தலைவர்களின் முகமூடிகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சேலத்தில் இரவு, பகலாக இவற்றைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சி கொடிகள் சைசுக்கு ஏற்றவாறு கொடியின் விலை ரூ 10 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொடிகள் சேலம் தவிர திருநெல்வேலி, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

கடந்த ஒரு மாதமாக வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடிகளை தயாரித்து வருகின்றனர். எதிர்வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஆர்டர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு ஆர்டர் வந்து வந்தாலும் அதை தயாரித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்க தொழிலாளர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com