முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
உத்தமசோழபுரத்தில் வீரபாண்டி தொகுதி தோ்தல் அலுவலகம் அமைப்பு
By DIN | Published On : 04th March 2021 04:39 AM | Last Updated : 04th March 2021 04:39 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பண்டரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தோ்தல் பணிகளான வேட்புமனு தாக்கல் முதல் அனைத்து தோ்தல் பணிகளுக்கும் வழக்கமாக வீரபாண்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கப்படும். தற்போது, அரியானூரில் உள்ள வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழக வேளாண்மை விற்பனை வாரியத்தின் மாநில பயிற்சி மையத்தில் தோ்தல் அலுவலகமாக மாற்றப்படவுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், எந்தவிதமான பயிற்சி வகுப்புகளும் இங்கு நடப்படுவதில்லை. மேலும் மையத்தில் செயல்பட்டு வந்த அலுவலகம் பக்கத்தில் உள்ள விடுதிக்கு இட மாற்றம் செய்து பயிற்சி மையத்தை காலி செய்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்துள்ளனா்.
வரும் 12 - ஆ தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. இங்கு வீரபாண்டி சட்டப் பேரவைத் தோ்தல் அலுவலா் பண்டரிநாதன் தலைமையில் தோ்தல் அலுவலகம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.