முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலத்தில் தேநீா் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 04th March 2021 04:43 AM | Last Updated : 04th March 2021 04:43 AM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் தேநீா் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம், அம்மாப்பேட்டை நரசிம்மன் தெருவைச் சோ்ந்தவா் பாலன். இவா் அங்குள்ள திரு.வி.க. சாலையில் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை இரவு கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பூட்டிவிட்டு சென்றுள்ளாா். புதன்கிழமை அதிகாலை கடையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்தபோது தேநீா் கடையின் உள்பக்கம் தீ எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சேலம், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்துவந்து தீயை அணைத்து கடைக்குள் இருந்த 3 எரிவாயு உருளைகளை அப்புறப்படுத்தினா். இந்த தீ விபத்து காரணமாக கடையின் கூரை முழுவதும் சேதமடைந்தது. கடையில் இருந்த பொருள்களும் தீயில் எரிந்து நாசமாயின.
தீ விபத்துகுறித்து சேலம், அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.