அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயம்
By DIN | Published On : 04th March 2021 04:43 AM | Last Updated : 04th March 2021 04:43 AM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் அரசு நகரப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயம் அடைந்தனா்.
பேளூரில் இருந்து சேலம் நோக்கி அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அயோத்தியாப்பட்டணம், உடையாபட்டி அருகே வந்தபோது முன்பக்கம் டயா் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்புறம் சேதமடைந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநா் உள்பட 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் விரைந்து சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஓரமாக நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.
விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.