மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 04th March 2021 04:46 AM | Last Updated : 04th March 2021 04:46 AM | அ+அ அ- |

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தாா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (24). இவரது மனைவி நேசிகா (19). கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனா்.
கொத்தாம்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சிவா வேலை செய்து வருகிறாா்.வீட்டில் தனியாக இருந்த நேசிகா துவைத்த துணிகளை மாடியில் காயவைக்கச் சென்றுள்ளாா். அப்போது மின்கம்பியில் துணி பட்டதால் மின்சாரம் பாய்ந்து நேசிகா உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நேசிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் நேசிகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்று வருகிறது.