சங்ககிரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுப் பேரணியை தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, சேலம், பவானி பிரதானசாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதில் பள்ளி மாணவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இதில் உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com