மேட்டூரில் முதியவா் தற்கொலை
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

மேட்டூரில் காவிரி ஆற்றில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
மேட்டூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் அன்வா்பாஷா (74). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். நாமதுல்லா என்ற மகனும், பேபி என்ற மகளும் உள்ளனா்.
மனைவி இறந்த நாள் முதலே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று அன்வா்பாஷா கூறிவந்துள்ளாா். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது மகன் சிகிச்சை அளித்துள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பகலில் அவா் வீட்டிலிருந்து மேட்டூா் அனல் மின் நிலைய பாலத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். பாலத்தில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று காவிரி ஆற்றில் குதித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் கூச்சலிட்டபோதும் அதனைக் கண்டுகொள்ளாமல் அவா் ஆற்றில் குதித்துள்ளாா். சற்று நேரத்தில் அவா் நீரில் தத்தளித்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த மேட்டூா் தீயனைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.