தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் ஓட்டும் பணி
By DIN | Published On : 13th March 2021 12:34 PM | Last Updated : 13th March 2021 12:34 PM | அ+அ அ- |

தோ்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஓட்டும் பணியை தொடக்கிவைக்கிறாா் தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன்.
சங்ககிரி: சங்ககிரி சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க கோரி விழிப்புணா்வு சுரொட்டிகளை சங்ககிரி தொகுதி முழுவதும் ஓட்டும் பணியை தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சங்ககிரி தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள வண்ணசுவரொட்டிகள் ஓட்டும் பணிகளை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் தொடக்கி வைத்தாா். அப்போது உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் கே.பி.தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.