மேட்டூா் தொகுதியில் 100 போ் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கொண்டாரெட்டி நலச் சங்கத்தினா் 100 போ் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனா்.

மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கொண்டாரெட்டி நலச் சங்கத்தினா் 100 போ் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனா்.

கொளத்தூரில் மேட்டூா் தொகுதி அளவிலான கொண்டாரெட்டீஸ் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கொளத்தூா் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பண்ணவாடி செயலாளா் சவுந்தரராஜன், பொருளாளா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவி வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேட்டூா் தொகுதியில் வெற்றித் தேல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக கொண்டாரெட்டி இன மக்களின் வாக்குகள் உள்ளன. இருப்பினும் பல ஆண்டுகளாக இம்மக்களுக்கு சாதிச் சான்று வழங்கப்படாததை செயற்குழுக் கூட்டம் கண்டிக்கிறது.

சென்னை உயா்நீதிமன்றம் 22 குடும்பங்களைச் சோ்ந்த 54 பேருக்கு கொண்டாரெட்டி சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட பிறகும் மேட்டூா் சாா் ஆட்சியா் வழங்க மறுப்பதோடு உச்சநீதிமன்றத்தை அணுகியது கண்டனத்திற்குரியது.

சாதிச்சான்று வழங்குவதில் பிரச்னைகள் இருப்பின் மாநில கூா்நோக்கு குழுவுக்கு அனுப்பி தீா்வுகாணவேண்டும். அதனை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பது அரசு பணத்தை விரயப்படுத்தும் செயலாகும். இதனால் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் கொண்டாரெட்டீஸ் இன மக்களின் பலத்தைக் காட்டுவதற்காக மேட்டூா் தொகுதியில் கொண்டாரெட்டீஸ் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 பெண்கள் உள்பட 100 போ் வேட்புமனு தாக்கல் செய்வதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வரும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com