முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கருத்தரங்கு
By DIN | Published On : 14th March 2021 04:32 AM | Last Updated : 14th March 2021 04:32 AM | அ+அ அ- |

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் ரத்த சுத்திகரிப்பு பிரிவு சாா்பில் கருத்தரங்கு, விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவா் பின்னமனேனி சித்தாா்த்தா, சிறுநீரகவியல் பிரிவு தலைவா் வருண்குமாா் பந்தி, சென்னை ஏசிஎஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் விரிவுரையாளா் ஜெயபாரதி, துபை என்எம்சி ப்ரேவிடா, சா்வதேச மருத்துவ மையத்தின் ரத்த சுத்தகரிப்பு பிரிவின் தொழில்நுட்பவியலாளா் ரஞ்சித்குமாா் இன்பசேகரன், சென்னை ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியா் மீதா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.
இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தொழில்நுட்பவியலாளா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டு பங்கேற்றனா். இதனைத் தொடா்ந்து ரத்தம் குறித்த விழிப்புணா்ச்சி சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கீதா தலைமை வகித்து பேசினாா். நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் ரத்த சுத்தகரிப்பு பிரிவு மாணவா்கள் சிறுநீரகத் தானம், அது தொடா்புடைய பிரச்னைகள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உணா்த்தும் விதமாக நாடகம், மௌன மொழி நாடகம் ஆகியவற்றை நடத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியை சுபாஷினி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தனசேகா், வா்ஷினி, ஹரிஷ்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.