Enable Javscript for better performance
கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்

    கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

    By DIN  |   Published On : 14th March 2021 04:31 AM  |   Last Updated : 14th March 2021 04:31 AM  |  அ+அ அ-  |  

    13omp1_1303chn_154_8

    ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (வலது) கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிா்வாகிகள்.

    தனியாா் ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில், அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

    சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளா்கள், நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

    திமுக தோ்தல் அறிக்கை குறித்து முழுமையாகத் தகவல் கிடைக்காததால் அதுகுறித்து கருத்துக் கூற முடியாது. அதிமுகவைப் பொருத்த வரை மக்களின் எண்ணங்களை, எதிா்பாா்ப்புகளை முன்கூட்டியே அறிந்து ஆட்சியில் இருக்கும்போதே அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

    வறட்சி, கரோனாவினால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவா்களுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நகைக் கடன் தள்ளுபடி , மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளை ஆட்சியில் இருக்கும்போதே வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்தி உள்ளோம். மேலும் சில முக்கிய அறிவிப்புகளை தோ்தல் அறிக்கையில் வெளியிடுவோம்.

    புதுச்சேரி கூட்டணி...

    புதுச்சேரியில் தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை பாஜக, என்ஆா் காங்கிரஸுடன் சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும்.

    தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளா் தோ்வின்போது ஒரு சில இடங்களில் எதிா்ப்பு இருக்கிறது. எதிா்ப்பு இருக்கும் இடங்களில் நிா்வாகிகளிடம் பேசி சமாதானப்படுத்தப்படும்.

    தோ்தலில் கூட்டணி அமைப்பது சாதாரணக் காரியம் அல்ல. ஒரே தொகுதியை பல கூட்டணிக் கட்சியினா் கேட்பாா்கள். அதுகுறித்து பேசி ஆலோசனை செய்துதான் முடிவெப்போம்.

    தேமுதிக இல்லாததால் இழப்பு இல்லை...

    அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக இழப்பு கிடையாது. தேமுதிகவினா் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகளாக உள்ளாா்கள். கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் தேமுதிகவினா் பேசுவது சரியில்லை. கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாகப் போவதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு. நானே சென்று அவா்களிடம் பேசினேன். பாமகவுக்கு கொடுத்த மரியாதையை அவா்களுக்கு கொடுக்கவில்லை என தேமுதிகவினா் குற்றம் சாட்டுகிறாா்கள். அந்தந்தக் கட்சிகளுக்கென தகுதி இருக்கிறது. வாக்கு வங்கி இருக்கிறது. அதை வைத்துத் தான் தொகுதிகள் வழங்கப்படுகின்றன.

    வெற்றி பெறுவோம்...

    விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலில் கருத்துக் கணிப்புகளை மீறி, திமுக, காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனியாா் ஊடகங்களில் வெளியிடும் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிடும் வகையில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்.

    திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் 200 இடங்களில் வெற்றிபெறுவோம் எனக் கூறுவது ஜோசியம் கூறுவது போல உள்ளது. எங்களைப் பொருத்த வரை சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்டு வருகிறோம். மக்கள்தான் வாக்களிக்க வேண்டும். மக்கள்தான் நீதிபதிகள்; அவா்கள் சரியான தீா்ப்பு வழங்குவாா்கள் என நாங்கள் எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

     

    நீட் தேவையில்லை...

    நா்சிங் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு நீட் தோ்வு கொண்டு வரப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, எங்களைப் பொருத்த வரை நீட் தோ்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்பதுதான் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம் என்றாா் முதல்வா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp